Tuesday, August 17, 2010

Heading : " மனசு "

ஜீவன் மாதிரியில்லை. ஈஸ்வரன் மனசுக்கும் மேற்பட்ட சக்தி. அதனாலே அவனுடைய கிருபையில்தான் மனசு அடங்க முடியும். அது தம்மைத் தாமே அடக்கிக் கொள்ளவில்லை. ஈஸ்வரன் தான் மாயைக் கலப்பற்ற தம்முடைய ஆத்ம ஸ்வரூபத்திலே ஜீவமனசை வசப்படுத்தி வைக்கிறான். பிரயாஸை, பிரயத்தன் தான் ஜீவன் செய்யக்கூடியது. அதற்கு மேலே, மாயா நாடகத்தைப் பண்ணினவன் தான் சித்தியை அருள்வேண்டியவன். ஆனபடியால், ஓயாமல் வேலை பண்ணிக்க கொண்டேயுள்ள மனசு எப்படி வேலையே பண்ணாததும், தமக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிற ஆத்மாவிலே கரைந்து போகமுடியும் என்று தர்க்கரீதியில் கேட்பதில் அர்த்தமில்லை. அதைத் தானே மாயை இதுவாக்கியிருக்கிறது? இதே மாதிரி, 'அது' அதுவாக ஆகவும் இடம் கொடுத்து, தான் விலகிப்போய் விடுகிறது.

மனசால்.....ஆத்மாவைப் பிடிக்க முடியாது. ஆனால், நமக்குத் தெரிந்தது, நம்மை சதாசர்வ காலமும் இறுக்கிப் பிடித்துகொண்டிருப்பது, இந்த மனசுதான். அதனால், இதை வைத்துக்கொண்டுதான் நாம் பிரயாசை, பிரயத்னம், சாதனை செய்தாக வேண்டும். மனசினால் முடியக்கூடியது, உபத்ரவம் பிடித்த தம்மை எப்படியாவது தொலைத்துத் தலைமுழுகி விட்டு, உபத்ரவமே இல்லாத ஆத்மாவாக ஆகிவிட வேண்டுமென்று நினைப்பதுதான். தம்மால் முடிந்த இந்த நினைப்பை அது விடாமல் வைராக்யத்தோடு பயிற்சி செய்துகொண்டேயிருக்கவேண்டும்.. அப்புறம், 'கிருபை' என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அது பாக்கி வேலையைப் பார்த்துக்கொண்டுவிடும்.


- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்.

------------------------------------------------------------------------------------
ஸ்ரீ மஹா பெரியவர் பெரிய ஒரு தத்துவத்தை எளியமுறையில், அனைவருக்கும் புரியும்படியாய் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு ஈடு, இணை உண்டா? இனி, அப்படிப்பட்ட ஒரு மஹான் எப்போ வருவாரோ? ' நம் ' எல்லோர் கலியையும் தீர்க்க.............

'Bharatheeyan-Santhosh'






------------------------------------------------------------------------------------------------------------

இது கல்கி உபயம். கல்கி இதழுக்கு மிக்க நன்றி. Published on 15/8/2010.

No comments: